‘கில்லி’ சாதனையை ஓவர்டேக் செய்த ‘மங்காத்தா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்


‘கில்லி’ சாதனையை ஓவர்டேக் செய்த ‘மங்காத்தா’- அஜித் ரசிகர்கள் உற்சாகம்
x

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில், அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதன்முறையாக நடித்திருந்தார். திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவை சந்தித்த அஜித்துக்கு, ‘மங்காத்தா’ திரைப்படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘மங்காத்தா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ.4.65 கோடி வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் ரூ.5 கோடி வசூலை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் விஜய் நடித்த ‘கில்லி’ படம் ரூ.4.23 கோடி வசூலித்து அதிக வசூல் சாதனை படைத்திருந்தது. தற்போது அந்த சாதனையை ‘மங்காத்தா’ படம் ஓவர்டேக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாதனை காரணமாக, அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 More update

Next Story