ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகும் 'மழையில் நனைகிறேன்' படம்

காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மழையில் நனைகிறேன்' படம் ரஜினியின் பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகும் 'மழையில் நனைகிறேன்' படம்
Published on

சென்னை,

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியது என்னவென்றால், "மழைக்கும் இந்த கதைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மழை ஒரு கதாபாத்திரமாகவே வரும். மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடியும். அதனால்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது. இதற்கிடையில் தயாரிப்பாளர் ரஜினியின் தீவிர நண்பர் என்பதால், ரஜினிகாந்த் இப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இப்படம் பெரும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com