வீட்டின் மேல் பறந்த ஏவுகணை? - வீடியோ வெளியிட்ட நடிகர்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கின.
வீட்டின் மேல் பறந்த ஏவுகணை? - வீடியோ வெளியிட்ட நடிகர்
Published on

துபாயில் இருக்கும் நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது வீட்டின் மேல் பறந்த ஏவுகணையை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

“தாக்குதலால் ஏற்பட்ட பயங்கரமான சத்தம் எங்கள் துபாய் வீட்டையே உலுக்கியது. அந்த சத்தத்தை கேட்ட என் மகள் மிகவும் பயந்து விட்டார்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீரென தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது. அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Also Read
’அல்லு அர்ஜுனுக்காக 15 நாட்கள் அதை செய்தேன்’ - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்
வீட்டின் மேல் பறந்த ஏவுகணை? - வீடியோ வெளியிட்ட நடிகர்

தாக்குதல்களுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் நகரங்கள், கட்டாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com