மோகன் ஜியின் “திரௌபதி 2” படப்பிடிப்பு பணி நிறைவு

'திரௌபதி 2' படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மோகன் ஜியின் “திரௌபதி 2” படப்பிடிப்பு பணி நிறைவு
Published on

சென்னை,

2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து மோகன் ஜி 'திரௌபதி 2' படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சரித்திர காலப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பித்து அரியலூரில் நிறைவடைந்ததுள்ளது.

படப்பிடிப்பு பணி நிறைவடைந்துள்ள நிலையில், இயக்குனர் மோகன் ஜி திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தரிசனம் செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com