அஜித் படத்தில் இணையும் மோகன்லால்

அஜித்தின் 64-வது படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் படத்தில் இணையும் மோகன்லால்
Published on

‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் நடிக்கவுள்ளார். இது அவரது 64-வது படம் ஆகும். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும், முதற்கட்டமாக சில காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கார் பந்தயத்தில் பிசியாக இருக்கும் அஜித், விரைவில் படக்குழுவுடன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் 64வது படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்னும் சில பிரபலங்கள் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படு கிறது. அந்தவகையில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். மேலும் மிஷ்கின், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் நடிக்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com