படம் எடுப்பதாக எனது பெயரில் பண மோசடி - சல்மான்கான் எச்சரிக்கை

படம் எடுப்பதாக எனது பெயரில் பண மோசடி - சல்மான்கான் எச்சரிக்கை
Published on

இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் 1988-ல் பீவி ஹோ தோ ஐசி என்ற படம் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கி கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். இதனால் எப்போதும் பாதுகாப்புடனேயே வெளியே செல்கிறார். துப்பாக்கியும் வைத்துள்ளார்.

இந்த நிலையில் புதிய படம் எடுப்பதாகவும் அதற்கு நடிகர்-நடிகைகளை தேர்வு செய்வதாகவும் சல்மான்கான் பெயரில் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு பணமோசடி நடந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சல்மான்கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மெயிலும் அனுப்பி மோசடி நடந்து வருகிறது. இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com