நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (25.07.2025)

நாளை மறுநாள் (25.07.2025) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாளை மறுநாள் (25.07.2025) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
"தலைவன் தலைவி"
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவன் தலைவி'. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"தி பென்டாஸ்டிக் போர் பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்"
"தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்" திரைப்படம் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) ஆறாவது கட்டத்தின் முதல் படமாகும். இதில் பெட்ரோ பாஸ்கல், வானிசா கிபி, பால் வால்டர் ஹவுசர், எபன் மாஸ்-பக்ராக், மற்றும் ஜோசப் குயின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
"மாரீசன்"
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ள படம் மாரீசன். இதில் வடிவேலு, பகத் பாசில், லிவிங்ஸ்டன், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
"ஹரி ஹர வீர மல்லு"
கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. பவன் கல்யாண் நடிப்பில் வரலாற்று பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
"மகா அவதார் நரசிம்மா"
கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் மகா அவதார் நரசிம்மா. இந்த படம் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் ஒரு திரைப்படத் தொடரின் ஒரு பகுதியாக வெளிவர உள்ளது.






