நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்


நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
x

நாளை (மே 1) திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை (01.05.2025) வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

'ரெட்ரோ'

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'டூரிஸ்ட் பேமிலி'

அறிமுக இயக்குனர் பிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் பேமிலி'. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சசிகுமார் சிமரன் இலங்கை தமிழ் பேசுபவர்களாக நடித்துள்ளனர்.

'ஹிட் 3'

பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹிட் 3'. இதில் கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

1 More update

Next Story