ஹோம்லி இமேஜை தாண்டி... கவர்ச்சி புகைப்படங்களால் கவனம் ஈர்த்த அபர்ணதி

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் அபர்ணதி மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஹோம்லி இமேஜை தாண்டி... கவர்ச்சி புகைப்படங்களால் கவனம் ஈர்த்த அபர்ணதி
Published on

சென்னை,

திரைப்படங்களில் பெரும்பாலும் ஹோம்லியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த அபர்ணதி, சமீப காலமாக மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பான 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை அபர்ணதி. அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகளைப் பெற்று, 'தேன்', 'ஜெயில்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற எளிமையான தோற்றத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

'காளிதாஸ் 2' படத்தின் வரவேற்பு

அபர்ணதி நடித்த 'காளிதாஸ் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் அவரது நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தனது திரையுலக பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.

சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவ்

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் அபர்ணதி மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவரது ஒவ்வொரு பதிவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்

திரைப்படங்களில் பெரும்பாலும் ஹோம்லியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த அபர்ணதி, சமீப காலமாக மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com