'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

சென்னை,

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற மே மாதத்தில் இத்திரைபடத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com