'2,000 ரூபாய்க்கு அதிகமாக உடைக்கு செலவு செய்ய மாட்டேன்' - பிரபல நடிகை

சொந்தமாக உடைகள் வாங்க 2,000 ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்ய மாட்டேன்'' என்று மிருணாள் தாகூர் கூறினார்.
image courtecy:instagram@mrunalthakur
image courtecy:instagram@mrunalthakur
Published on

சென்னை,

குறுகிய காலத்திலேயே இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் மிருணாள் தாகூர். துல்கர் சல்மானுடன் இவர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான 'சீதாராமம்' சிறந்த காதல் படமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் பணத்தை சேமிப்பது, சிக்கனமாக இருப்பது போன்ற விஷயங்களை மிருணாள் தாகூர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்தேன். பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். இதுவரை டிசைனர் உடைகளை வாங்கியதே இல்லை.

விலை உயர்ந்த உடைகள் வாங்குவது வீண் செலவு. பிடித்த உடைகளுக்காக அதிக அளவில் பணம் செலவு செய்தாலும் அவற்றை ஒருமுறை மட்டும்தான் உபயோகிக்க முடியும்

சினிமாக்கள், படவிழாக்கள், பார்ட்டி, இன்டர்வியூக்களுக்காக நான் இப்போதுகூட உடைகளை வாடகைக்கு எடுத்து உடுத்திக்கொண்டு செல்கிறேன். நிறைய பேர் இந்த முறையை கடைப்பிடிக்கிறார்கள். சொந்தமாக உடைகள் வாங்க 2,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய மாட்டேன்'' என்றார்.

உடைகளில் மிருணாள் தாகூர் காட்டும் சிக்கன நடவடிக்கை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. 'கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் கஞ்சத்தனத்தில் நீங்கள் நம்பர் ஒன்' என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com