'முபாசா: தி லயன் கிங்': தெலுங்கில் முபாசாவுக்கு குரல் கொடுத்த முன்னணி நடிகர்

இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.
'முபாசா: தி லயன் கிங்': தெலுங்கில் முபாசாவுக்கு குரல் கொடுத்த முன்னணி நடிகர்
Published on

சென்னை,

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து 1994 -ம் ஆண்டு 'தி லயன் கிங்' என்ற பெயரில் கார்டூன் டெக்னாலஜியிலும், அதே பெயரில் 2019-ம் ஆண்டு அனிமேஷன் தொழில்நுட்பத்திலும் படங்கள் வெளியாகின.

இந்த லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து முபாசா : தி லயன் கிங் படம் உருவாகியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. காட்டுக்கே ராஜாவான முபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

'முபாசா: தி லயன் கிங்' திரைப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரைக்கு வரவுள்ளது. இதில், இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரபாஸ், மகேஷ் பாபு, ராம் சரண் உள்ளிட்டவர்களில் யார் இப்படத்தில் முபாசாவுக்கு குரல் கொடுக்க போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. இந்நிலையில், எதிர்பார்த்தப்படி, நடிகர் மகேஷ் பாபு முபாசாவுக்கு குரல் கொடுத்துள்ளார். தற்பொழுது படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com