'அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை'- யுவன் சங்கர் ராஜா உருக்கம்

'கோட்' படத்தின் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் உருவாகியுள்ளது.
'அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை'- யுவன் சங்கர் ராஜா உருக்கம்
Published on

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'கோட்' படத்தின் 2வது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' வெளியாகியுள்ளது. இந்த பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'தி கோட்' படத்தின் 2வது பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பெங்களூருவில் இந்த பாடலுக்காக நானும் வெங்கட் பிரபுவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை எனது அக்கா பவதாரணி மருத்துவமனையில் இருந்து நலமுடன் வந்ததும் அவரின் குரலில் உருவாக்கலாம் என நினைத்தேன்.

ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவர் இறந்த செய்தி எங்களை வந்தடைந்தது. அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நான் நினைத்து பார்க்கவே இல்லை. இதனை உருவாக்க என்னுடன் பணியாற்றிய குழுவுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com