முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் தமன்

முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் தமன்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். நேரில் சந்தித்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், திரைத்துறையில் அவருடன் நெருங்கி பழகிய இயக்குனர்கள், சக நடிகர்கள் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-யை இசையமைப்பாளர் தமன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெற்றதோடு, தமன் இசையமைத்த பிரச்சார பாடல்கள் கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com