“ரவிமோகன் வந்த பிறகுதான் என் வாழ்க்கை மாறியது” - கெனிஷா உருக்கமான பதிவு!

“நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு” என்று ரவிமோகனுக்கு நன்றி தெரிவித்து கெனிஷா பதிவிட்டுள்ளார்.

“ரவிமோகன் வந்த பிறகுதான் என் வாழ்க்கை மாறியது” - கெனிஷா உருக்கமான பதிவு!
Published on

பிரபல பாடகியும் நடிகர் ரவிமோகனின் தோழியுமான கெனிஷா கடந்த 7-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கெனிஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

சின்ன வயதில் இருந்தே பல நேரங்களில் நான் ஒரு ஆளாக மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்த மாதிரியே ஒரு உணர்வு. நான் பெருசா எதிர்பார்க்கிறேன் என நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு சின்ன அன்பும், மதிப்பும் மட்டும்தான். அப்புறம் ரவிமோகன்... நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு. என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பற்றிய என்னோட பார்வை எல்லாம் புதுசா இருந்துச்சு.

மத்தவங்க இதை எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் நம்மளை பற்றி தெரிஞ்சவங்களுக்கு நாம் எவ்வளவு உண்மையாக, நிம்மதியாக இருக்கோம் என புரியும். என்னோட கஷ்டமான நேரங்களில் எனக்கு துணையாக நின்று, என்னோட ஒவ்வொரு சின்ன வெற்றியை கூட உன்னோட வெற்றியா நீ கொண்டாடினாய். அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com