'கூலி' படத்தில் என்னுடைய ரோல் சுவாரஸ்யமாக இருக்கும் - நடிகர் அமீர் கான்

பாலிவுட் நடிகர் அமீர் கான் ரஜினியின் 'கூலி' படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
மும்பை,
"கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ" ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினியை வைத்து 'கூலி' திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ரஜினியின் கூலி படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கான், கூலி படத்தில் தனது ரோல் குறித்து பேசியுள்ளார். அதாவது, கூலி படத்தில் என்னுடை ரோல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த கேரக்டரை எல்லோருக்கும் பிடிக்கும்' என கூறி இருக்கிறார்.