வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் 'கஸ்டடி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படம் 'கஸ்டடி'. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com