

சென்னை,
குடும்ப கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை தபு மற்றும் சுஷ்மிதா பேட், ஐஸ்வர்யா ராஜேஷ்,விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தமிழ் நடிகர் அசோக் செல்வன் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் நாகார்ஜுனா. தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். கடைசியாக ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கூலி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாகார்ஜுனா. தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக உள்ள நாகார்ஜுனா நடிக்கும் 100-வது படத்தை தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘கிங் 100’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை தபு மற்றும் சுஷ்மிதா பேட், ஐஸ்வர்யா ராஜேஷ்,விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தமிழ் நடிகர் அசோக் செல்வன் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. 'சூது கவ்வும்', 'தெகிடி', 'ஓ மை கடவுளே', 'போர் தொழில்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் செல்வன், முதல்முறையாக பிரம்மாண்ட தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, அசோக்செல்வன் ஹீரோவாக நடித்துள்ள அன்பில் அவன் படம் இன்று ரிலீஸ் ஆக உள்ளது. காதல், ஆக்ஷன் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முன்னதாக இந்த படம் குறித்து பேசிய அசோக் செல்வன், என் மனசுக்குப் பிடித்த கதையை மக்களுக்குப் பிடித்த மாதிரி ‘அன்பில் அவன்' படத்தில் செய்திருக்கிறேன். நேரத்தைச் செலவு செய்து மக்கள் படத்தைப் பார்க்கிறார்கள். அதற்காக உழைப்பது மட்டுமே என் பொறுப்பு. விரும்பி ரசித்துத்தான் ஒரு வேலையைச் செய்வோம். மக்களோடு இணைவதுதான் எனக்கு முக்கியம். அன்பில் அவனில் அதைச் செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்”என்றார்.