நானி நடித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' புதிய வீடியோ வெளியீடு!

'சூர்யாவின் சனிக்கிழமை' படக்குழுவினர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Published on

சென்னை,

டைரக்டராக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்து, தற்போது வில்லனாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. மெர்சல், மாநாடு, டான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 'நடிப்பு ராட்சசன்' என்று பாராட்டப்படுபவர்.

இவர் தற்போது, நடிகர் நானியின் 31-வது திரைப்படமான 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்ற பெயரில் வெளியாகிறது. அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்குகிறார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.

டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 'நாட் எ டீசர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக வருகிறார். அதன் இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com