"நரிவேட்டை" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

டோவினோ தாமஸ், சேரன் நடித்த ‘நரிவேட்டை’ படம் வரும் 23ம் தேதி திரையரங்களில் வெளியாகிறது.
"நரிவேட்டை" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் 'எல் 2 எம்புரான்' படத்தில் நடித்துள்ளார்.

அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்டை' என்ற படத்தில் டோவினோ தாமஸ்நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும். நரி வேட்டை படத்தில் நடிகர் சேரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் சேரன் போலீஸ் அதிகாரியாக 'கேசவதாஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான 'மின்னல்வாலா' பாடல் சமீபத்தில் வெளியானது. மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

"நரிவேட்டை" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் மே 16 ஆம் தேதியாக இருந்தது. ஆனால் தற்பொழுது சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com