நஸ்லனின் “மாலிவுட் டைம்ஸ்” டீசர் வெளியானது

அபினவ் சுந்தர் இயக்கத்தில் நஸ்லன் நடிக்கும் ‘மாலிவுட் டைம்ஸ்’ திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நஸ்லனின் “மாலிவுட் டைம்ஸ்” டீசர் வெளியானது
Published on

மலையாளத் திரைத்துறையில் வளர்ந்துவரும் நட்சத்திர நடிகரான நஸ்லன் ‘பிரேமலு’ மூலம் பெரிதாக கவனிக்கப்பட்டார். தொடர்ந்து வெளியான ‘ஆலப்புழை ஜிம்கானா’ படமும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. நஸ்லன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘லோகா’. நஸ்லன் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றிய ‘ஐ அம் காதலன்’ படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நஸ்லன், காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும்கலித் ரகுமான் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘மட்டஞ்சேரி மாபியா’ படத்திலும் நஸ்லன் நடிக்கவிருக்கிறார்.

தற்போது, ‘மாலிவுட் டைம்ஸ்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமா மீது ஆர்வமான நாயகன் சிறந்த ஹாரர் படங்களை இயக்கும் முயற்சிகளாக இப்படம் உருவாகியுள்ளது. இதனை அபினவ் சுந்தர் இயக்க, ஆஷிக் உஸ்மான் தயாரித்துள்ளார். ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com