சம்பளத்தை உயர்த்திய ‘நேஷனல் கிரஷ்’ ருக்மணி வசந்த்!

நேஷனல் கிரஷ்’ என கொண்டாடப்படும் ருக்மணி வசந்த் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.
சம்பளத்தை உயர்த்திய ‘நேஷனல் கிரஷ்’ ருக்மணி வசந்த்!
Published on

கன்னட திரை உலகில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற நடிகை ருக்மணி வசந்த், தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் உடன் ‘மதராசி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும் ரிஷப் செட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிக வரவேற்பைப் பெற்றார். இதன் பின்னர், இந்திய அளவில் ‘நேஷனல் கிரஷ்’ என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படுகிறார்.

தற்போது யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார். இதுதவிர தமிழிலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ‘நேஷனல் கிரஷ்’ என கொண்டாடப்படும் ருக்மணி வசந்த் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் பெற்றுவந்த அவர், தற்போது அதை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பள உயர்வு தயாரிப்பாளர்களை சற்று யோசிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com