

தமிழில் ரஜினியுடன் ‘தர்மன்’, இந்தியில் சல்மான்கானுடன்‘மான்ஸ்டர்’, மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘பாதயாத்திரை’ படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஜயா’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். நடிகை, தயாரிப்பாளர் என கலக்கும் நயன்தாரா சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் சினிமா மீது கொண்ட தீவிர ஆர்வத்தில் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், மலையாள, கன்னட சினிமா மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் மற்றும் டாக்ஸிக் திரைப்படங்கள், பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது இவர் நடித்த ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையே, நயன்தாரா ஒரே நேரத்தில் 3 சூப்பர் ஸ்டார்களின் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் உடன் ‘தர்மன்’ படப்பிடிப்பில் இணைந்துள்ள அதே வேளையில் இந்தியில் சல்மான் கான் - வம்சி பைடிப்பள்ளி இணைந்துள்ள ‘மான்ஸ்டர்’ படத்தில் நயன்தாரா முக்கியமான ரோலில் நடித்துவருகிறார். மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டியின் ‘பாதயாத்திரை’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.