நயன்தாராவின் “ஹாய்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷ்ணு எடவன் இயக்கும் ‘ஹாய்’ படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நயன்தாராவின் “ஹாய்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழிய’ எனும் பாடல் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த படக்குழு, இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகுமெனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com