நயன்தாரா திருமண தேதி முடிவானது?

வருகிற ஜூன் மாதம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், திருமண தேதியையும் முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா திருமண தேதி முடிவானது?
Published on

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருந்து கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களையும், கோவில்களுக்கு ஒன்றாக சென்று வழிபடும் புகைப்படங்களையும் வலைத்தளத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். அவ்வப்போது தனி விமானத்திலும் பயணிக்கின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளது என்று கிசுகிசுக்கள் வந்தன. இதனை விக்னேஷ் சிவன் மறுத்தார். விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நயன்தாரா அறிவித்தார்.

இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். நயன்தாரா அதிக படங்களில் நடிப்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தனர். இந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அஜித்குமார் நடிக்கும் 62-வது படத்தை இயக்க விக்னேஷ் சிவனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பாக வருகிற ஜூன் மாதம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், திருமண தேதியையும் முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com