கார்த்திக் சுப்பராஜின் “நீளிரா” படத்தின் டிரெய்லர் வெளியானது

சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘நீளிரா’ படம் வருகிற ஏப்ரல் 3ம் தேதி வெளியாகிறது.
கார்த்திக் சுப்பராஜின் “நீளிரா” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

இலங்கையில் போர் பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணம் நடைபெறுகிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பின்னணி. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘கல்யாண பைலா’ பாடல் வைரலானது.

இந்நிலையில், ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com