'துரந்தர்' படத்தில் 14 நிமிடங்களை கட் செய்த நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

இதனால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
'துரந்தர்' படத்தில் 14 நிமிடங்களை கட் செய்த நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?
Published on

ரன்வீர் சிங் நடிப்பில் உலகளவில் ரூ.1,300 கோடி வசூலித்து சாதனை படைத்த படம் 'துரந்தர். இந்த படம் இன்று நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் 3 மணி நேரம் 34 நிமிடங்களாக இருந்த இப்படத்தின் ரன்னிங் டைம் ஓடிடி-யில் 3 மணி நேரம் 25 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பலூச் சமூகம் குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, அந்த இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. இது படம் தணிக்கை செய்யப்பட்டதால் ஏற்பட்ட குறைப்பு என ரசிகர்கள் கருதினாலும், சென்சார் வாரியத்தின் அறிவுறுத்தலின்படி மாற்றப்பட்ட 3 மணி நேரம் 28 நிமிட பதிப்பே நெட்பிளிக்ஸ்-ல் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கிய அதே தியேட்டர் பதிப்புதான் இது என உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வன்முறை காட்சிகள் மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. இதற்கிடையே, வரும் மார்ச் 19 ஆம் தேதியன்று துரந்தர் 2 இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com