

'பியார் பிரேமா காதல்', எப்.ஐ.ஆர்., பொய்க்கால் குதிரை, காபி வித் லவ் படங்களில் நடித்து பேசப்பட்டவர் ரைசா வில்சன். சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் 'நோவா' என்ற படம் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட இடைவெளி குறித்து ரைசா வில்சன் மனம் திறந்தார். அவர் கூறுகையில், 'பியார் பிரேமா காதல்' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிறைய படங்கள் ஒப்பந்தமானேன். அதில் சில படங்கள் படப்பிடிப்பும் முடிந்து விட்டன.
ஜி.வி.பிரகாசுடன் 'காதலிக்க யாருமில்லை' என்ற படத்தில் நடித்தேன். 2019-ல் ஆரம்பித்த அந்த படம் இன்னும் ஏன் ரிலீஸ் ஆகவில்லை எனத் தெரியவில்லை. எதனால் இப்படி நடக்கின்றது என்றும் எனக்கு புரியவில்லை. அதனாலேயே ஒரு இடைவெளி விழுந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது.
இதே போலத்தான் 'சேஸ்' என்ற படமும் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. தற்போது 'நோவா' வெளியாக உள்ளது. இப்படி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்போது நிச்சயமாக எனக்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும் என உறுதியாக நம்புகிறேன்”, என்று குறிப்பிட்டார்.