‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

இத்திரைப்படத்தின் வருகிற ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

ஸ்பைடர் மேன் முதல் பாகமான 'ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்' கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, 'ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹேம்' படமும், கடைசியாக 3-வது பாகமாக 'ஸ்பைடர் மேன் நோ வே ஹேம்' படமும் வெளியாகின. இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து 4-வது பாகமான 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' உருவாகி இருக்கிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்பட பலர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் வருகிற ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் நியூ டீசர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com