வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த "ஆதர்ஷ குடும்பம்" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதர்ஷ குடும்பம்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த "ஆதர்ஷ குடும்பம்" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

சென்னை,

படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆதர்ஷ குடும்பம்’

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில், இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதர்ஷ குடும்பம்’. குடும்பக் கதையுடன் நகைச்சுவை மற்றும் அதிரடி அம்சங்களும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில், வெங்கடேஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர் ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும், நாரா ரோஹித், நிவேதா பெத்துராஜ், ராவ் ரமேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் யுவினா பார்த்தவியும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.

இணையத்தில் வரவேற்பைப் பெற்ற வசனம்

இப்படத்தில் யுவினா பார்த்தவி பேசும், “அப்பா... நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன்!” என்ற வசனம் இடம்பெற்ற வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியானது. மேலும், ‘சிட்டிபாபு - சிட்டிதல்லி’ தொடர்பான வீடியோக்களும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.

புதிய வெளியீட்டுத் தேதி

முன்னதாக, ‘ஆதர்ஷ குடும்பம்’ திரைப்படம் அக்டோபர் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ். தமன் மற்றும் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ள இப்படத்தை ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com