நிதினுக்கு ஜோடியான 'மிராய்' பட நடிகை

நிதின் முதன்முறையாக 'மிராய்' பட நடிகை ரித்திகா நாயக் உடன் ஜோடி சேருகிறார்.
நிதினுக்கு ஜோடியான 'மிராய்' பட நடிகை
Published on

சென்னை,

'ஜெயம்' திரைப்படம் தொடங்கி இன்று வரை, மாஸ் மற்றும் கிளாஸ் என இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வரும் தெலுங்கு சினிமாவின் எனர்ஜடிக் ஹீரோ நிதின், தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். விதவிதமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நிதின், இப்போது ஒரு சுவாரஸ்யமான கூட்டணியில் இணைந்துள்ளார்.

நிதின் முதன்முறையாக 'மிராய்' பட நடிகை ரித்திகா நாயக் உடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனங்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன.

சமீபத்தில் இப்படம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com