'தலைவன் தலைவி' படத்திற்கு 2 மொழியில் டப்பிங் பேசிய நித்யா மேனன்


தலைவன் தலைவி படத்திற்கு 2 மொழியில் டப்பிங் பேசிய நித்யா மேனன்
x
தினத்தந்தி 18 July 2025 10:56 AM IST (Updated: 22 July 2025 9:33 AM IST)
t-max-icont-min-icon

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளார்.

இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தலைவன் தலைவி படத்திற்காக டப்பிங் பேசிய வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. அதில் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு 2 மொழியிலும் டப்பிங் பேசியுள்ளார்.

1 More update

Next Story