நிவின் பாலி - மமிதா பைஜு நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி - மமிதா பைஜு நடித்துள்ள திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்'.
நிவின் பாலி - மமிதா பைஜு நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

'பிரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, பிரேமலு 2-ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் திருப்தி இல்லாததால் அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் 'பாவனா ஸ்டுடியோஸ்' பேனரில் தயாரித்துள்ள இந்த படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com