தேவையற்ற எந்த விமர்சனமும், வார்த்தைகளும் என்னை காயப்படுத்திடாது - மிருணாளினி ரவி

நடிகை மிருணாளினி ரவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
தேவையற்ற எந்த விமர்சனமும், வார்த்தைகளும் என்னை காயப்படுத்திடாது - மிருணாளினி ரவி
Published on

சென்னை,

​டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா' போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கில் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் எது? என்பது குறித்து மிருணாளினி ரவி தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அவர் கூறும்போது, எங்கோ இருந்த என்னை அழைத்து வந்து, சம்பளமும் கொடுத்து, பிரபலமும் ஆக்கி, ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கையும் ஏற்படுத்தி தருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த சினிமாவில் இருப்பது தான் எனக்கு மிகப்பெரிய கவுரவம். என்னிடம் யாராவது வந்து நீ சரியாக நடிக்கவில்லை என்று கூறினாலும் கோபம் வராது. என்னை நான் மாற்றிக்கொள்ளும் வித்தை தெரிந்தவள் என்பதால், "தேவையற்ற எந்த விமர்சனமும், வார்த்தைகளும் என்னை காயப்படுத் திடாது", என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com