8 ஆண்டுகளாக வாட்ஸ்அப் இல்லை...மெய்நிகர் உலகிற்கு ‘நோ’ சொன்ன நடிகை!

குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது மிக முக்கியம் என அவர் கூறினார்.
8 ஆண்டுகளாக வாட்ஸ்அப் இல்லை...மெய்நிகர் உலகிற்கு ‘நோ’ சொன்ன நடிகை!
Published on

சென்னை,

கடந்த எட்டு ஆண்டுகளாக தாம் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவில்லை என்று நடிகை ரஜிஷா விஜயன் தெரிவித்துள்ளார். மெய்நிகர் உலகத்தை விட நேரடி மனித தொடர்புகளையே அதிகம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த ரஜிஷா, சமூக ஊடக பயன்பாடு பற்றியும் கருத்து தெரிவித்தார். “பலர் இன்று கைப்பேசிகளுக்கு அடிமையாகிவிட்டனர். நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர மறந்து விடுகிறோம். நான் கடந்த எட்டு ஆண்டுகளாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவில்லை”என்றார்.

Also Read
ஷிவானியின் "ஹே பகவான்"...கவனம் ஈர்க்கும் டிரெய்லர்
8 ஆண்டுகளாக வாட்ஸ்அப் இல்லை...மெய்நிகர் உலகிற்கு ‘நோ’ சொன்ன நடிகை!

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் நேரம் செலவிடுவது மிக முக்கியம் என்றும், தொலைபேசியில் பேசுவதைக் காட்டிலும் நேரில் சந்தித்து பேசுவது அதிக அர்த்தமுள்ளதாக தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com