'ஜனநாயகன்' படக்குழுவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தீர்வாகாது-இயக்குனர் சீனு ராமசாமி வேதனை

ஜனநாயகன்' படத்தின் திருட்டுப் பிரதி வெளியானது ஒரு இயக்குனராக எனக்குப் பெரும் வேதனையளிக்கிறது இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

'ஜனநாயகன்' படக்குழுவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தீர்வாகாது-இயக்குனர் சீனு ராமசாமி வேதனை
Published on

சென்னை,

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜனநாயகன் படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இன்னும் திரைக்கு வராதநிலையில், முழு படமும் இணையத்தில் கசிந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு பல்வேறு தரைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனநாயகன்' படத்தின் திருட்டுப் பிரதி வெளியானது ஒரு இயக்குனராக எனக்குப் பெரும் வேதனையளிக்கிறது இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

​ஹாலிவுட்டில் உள்ளது போல் 'DMCA' (Digital Millennium Copyright Act) போன்ற கடுமையான காப்புரிமைச் சட்டங்களும், திருடப்பட்ட மூலத்தை நொடியில் கண்டறியும் 'Forensic Watermarking' மற்றும் 'AI Anti-Piracy Tracking' போன்ற நவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்களும் இங்கும் அவசரமாகத் தேவை.

​நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பைத் திருடுபவர்கள் இரும்புக் கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும். 'ஜனநாயகன்' படக்குழுவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தீர்வாகாது." என்று பதிவிட்டுள்ளார்."

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com