எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்- கமல்ஹாசன்

எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். #Kamalhassan #MakkalNeedhiMaiam
எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்- கமல்ஹாசன்
Published on

சென்னை

திருச்சியில் நடைப்பெறவுள்ள மக்கள் நீதி மய்ய மாநாட்டில் கலந்துக்கொள்ள தொடர்வண்டி மார்கமாக திருச்சி புறப்பட்டார் கமலஹாசன்!

திருச்சி பொன்மலை பகுதியில் நாளை மாலை 6 மணியளவில் மக்கள் நீதி மய்ய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயில் மூலம் இன்று பிற்பகல் கமல்ஹாசன் புறப்பட்டார்.

இந்த பயணத்தின் போது ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் கமல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்த நாளை நடைப்பெறவுள்ள மாநாட்டில் அவர் நேரடியாக மக்களிடம் உறையாற்றுவார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது;-

மக்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆவலில் ரயிலில் செல்கிறேன். உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. மறியல் போராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பவை தான்.

எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com