அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சை நடிகை ரதி மகன் விளக்கம்

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார்.
அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சை நடிகை ரதி மகன் விளக்கம்
Published on

தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அக்ஷரா ஹாசனின் சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையானது. சிலர் அர்ப்ப சுகத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்று அக்ஷரா ஹாசன் கண்டித்தார். முன்னாள் கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஷ் விர்வானியும், அக்ஷரா ஹாசனும் காதலித்ததாகவும் தனுஷ் விர்வானிதான் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தனுஷ் விர்வானி கூறும்போது, அக்ஷராவின் குறிப்பிட்ட அந்த புகைப்படங்கள் வெளியானபோது என்னை அழைத்து 2013-ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகி இருக்கும்? என்று கேட்டார். போனை பழுதுபார்க்க கொடுக்கவில்லை என்றும் கூறினார். அந்த காரியத்தை நான் செய்து இருப்பதாக நினைக்கிறாயா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார். அதன்பிறகு என்னை குற்றவாளிபோல் சித்தரித்து தகவல்கள் பரவின. இதனால் நாங்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டோம். எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் எனது தாய் ரதி அதிர்ச்சியாகி அக்ஷரா ஹாசன் குடும்பத்தினரிடம் பேச முயன்றார். நான் தடுத்து விட்டேன் என்றார். ரதி தமிழில் கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com