ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தபடத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அகிலன்' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com