"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் டைட்டில் டிராக் ரிலீஸ் அப்டேட் இன்று வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகிறது.
"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் டைட்டில் டிராக் ரிலீஸ் அப்டேட் இன்று வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர்களான மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'நட்சத்திரா' பாடல் வெளியாகி வைரலானது.

படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டைட்டில் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com