15வது திருமண நாள்...மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் - சினேகா ரெட்டி திருமணம் 2011-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி நடந்தது.
15வது திருமண நாள்...மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்
Published on

சென்னை,

பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டிக்கு திருமண நாள் பரிசாக விலையுயர்ந்த பென்ஸ் காரை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி இருவரும் 2011-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், தங்களது 15-வது திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு சிறப்பு பரிசாக பென்ஸ் காரை அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார்.

Also Read
"பேயை பார்த்து பயப்படுவதை விட 'ஏஐ'-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது" - சந்தானம்
15வது திருமண நாள்...மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் மற்றும் மகன் அல்லு அயன் ஆகியோர் முன்னிலையில், மனைவி சினேகா ரெட்டிக்கு கார் சாவியை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். கணவர் அளித்த இந்த விலையுயர்ந்த பரிசால் சினேகா ரெட்டி மகிழ்ச்சியடைந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com