ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: கேரள முதல்வருடன் விழாவில் பங்கேற்ற ரவி மோகன்

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கேரள சுற்றுலா துறை சார்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: கேரள முதல்வருடன் விழாவில் பங்கேற்ற ரவி மோகன்
Published on

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய ஓணம் கொண்டாட்டம் செப்டம்பர் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக ஓணம் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளாவின் அறுவடை திருவிழா என்றும் அழைக்கிறார்கள். ஓணத்தின் முக்கிய நாளான திருஓணம் நாளை நடைப்பெற இருக்கிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா, ஹிருதயபூர்வம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதில் லோகா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

கேரள சுற்றுலா துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைப்பெற்றது. விழாவை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com