ஏஐ-க்கு ’நோ’ சொல்லும் ஆஸ்கார்

2027-ஆம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருதுகளில் அதிரடி மாற்றங்களை ஆஸ்கார் அகாடமி அறிவித்துள்ளது.
ஏஐ-க்கு ’நோ’ சொல்லும் ஆஸ்கார்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதுகளுக்கான விதிகளில், அகாடமி நிர்வாகம் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, மனித உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கு கட்டுப்பாடி விதித்துள்ளது.

ஆஸ்கார் விருதுகளுக்குத் தகுதி பெற வேண்டுமானால், அந்த நடிப்பானது ஒரு மனிதரால் நேரிடையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். திரைக்கதை பிரிவில் போட்டியிட வேண்டுமானால், அந்த கதை முற்றிலும் ஒரு மனிதரால் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட முழுமையான கதைகள் தகுதியற்றதாகக் கருதப்படும்.

Also Read
ரஜினியுடன் நடிப்பு... கணவரின் கனவை நனவாக்கிய நடிகை மேக்னா ராஜ்
ஏஐ-க்கு ’நோ’ சொல்லும் ஆஸ்கார்

திரைப்படத் தயாரிப்பில் ஒரு கருவியாக (Supporting Tool) ஏஐ-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரு படைப்பின் அடிப்படை உயிரோட்டம் மனிதர்களிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாட்டிலிருந்து பங்கெடுக்கும் படங்கள், அந்நாட்டிற்கு அல்லாமல் நேரடியாக இயக்குநருக்கே விருது வழங்கப்படும், ஒரு நடிகர் ஒரே பிரிவில் பல படங்களுக்காகப் பரிந்துரைக்கப்படலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கார் விருதுகள் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

தொழில்நுட்பம் திரையுலகை மாற்றியமைத்தாலும், ஆஸ்கார் மேடையில் மனிதர்களின் கற்பனைத் திறனும், கலைத்திறனுமே என்றும் முதன்மையாக இருக்கும் என்பதை அகாடமி இந்த அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com