இலங்கையில் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!

‘பராசக்தி’ படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ள நடிகர் ரவி மோகன் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்துள்ளார்.
இலங்கையில் ஜெயசூர்யாவை சந்தித்த ரவி மோகன்!
Published on

கொழும்பு,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்துவந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.

பராசக்தி படத்துக்குகாக நடிகர்கள் ரவி மோகன் , சிவகார்த்திகேயன் உள்பட படக்குழு இலங்கை சென்றுள்ளது. இங்குதான் படத்தின் முக்கியமான பகுதிகளின் காட்சிகள் படமாக்கபட்டு வருகின்றன. இலங்கையில் பழமை மாறாமல் இருக்கும் இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.இதற்காக மதுரை ரெயில்வே ஸ்டேஷன் மற்றும் டெல்லி போன்று பிரத்யேகமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் குரு சோமசுந்தரம் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யாவை ரவி மோகன் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com