பராசக்தி அமரனைவிட ஒரு படி மேல்... நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

பராசக்தி படம் உணர்வு ரீதியாக எல்லாருடைய கதையாக உள்ளது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "பராசக்தி". 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் பரிந்துரை படி யு/ஏ 16+" சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் இன்று உலகளவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு சென்றார். அப்போது, அவரை பார்த்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன், "பராசக்தி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பராசக்தி அமரனைவிட ஒரு படி மேல் உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். பராசக்தி படம் உணர்வு ரீதியாக எல்லாருடைய கதையாக உள்ளது. மதுரையில் இருந்து பராசக்தி படத்தின் முதல் விமர்சனம் எனக்கு வந்துள்ளது. தணிக்கை குழுவுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன." என்று கூறியுள்ளர்.






