பாண்டிராஜின் “பரிமளா & கோ” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிக்கும் ‘பரிமளா & கோ’ படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
Parimala & Co
Published on

சென்னை,

‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், "வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா" என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.

இவர் தற்போது ‘பரிமளா & கோ’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ஜெயராம், மிஷ்கின், சாண்டி, யோகி உள்ளிட்டோர் நிறைவு செய்துள்ளனர். அதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ‘வாச்சா உடாத’ வீடியோ பாடல் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி, விமல், சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ‘பரிமளா & கோ’ படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com