அர்ஜென்டினாவில் வெளியாகும் பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமாஜின் அஸ் லைட்' படம்

'ஆல் வி இமாஜின் அஸ் லைட்' படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவில் வெளியாகும் பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமாஜின் அஸ் லைட்' படம்
Published on

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமாஜின்அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த 2 செவிலியர்களின் மும்பை வாழ்க்கையைச் சொல்லும் கதையை கொண்ட படமான இது, 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் இப்போது அர்ஜென்டினாவில் வெளியாகி உள்ளது. இதை அங்கு வெளியிடும் லக்ஸ்பாக்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம், அர்ஜென்டினா போஸ்டருடன் அறிவித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com