"நிம்மதியும் மகிழ்ச்சியும் தனிமையில்தான்" - சல்மான் கான் பேச்சு

சல்மான் கான் 60 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கி"ளாக வலம் வருகிறார்.

"நிம்மதியும் மகிழ்ச்சியும் தனிமையில்தான்" - சல்மான் கான் பேச்சு
Published on

மும்பை,

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், திரைப்படங்களைத் தாண்டி சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் அவர், இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். 60 வயதை எட்டியுள்ள சல்மான் கானுக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. பல நடிகைகளுடன் காதல், டேட்டிங் என்றெல்லாம் 'கிசுகிசு'க்கப்பட்ட சல்மான் கான் வயதான முரட்டு சிங்கி"ளாக வலம் வருகிறார்.

'தனிமைதான் எனக்கு நண்பன்'

இந்த நிலையில், தனது வாழ்க்கை குறித்து சமீபத்தில் மனம் திறந்த சல்மான் கான், "தனிமைதான் எனக்கு நண்பன். வாழ்க்கையை தனிமையின் பிடியில் விட்டுவிட்டேன். அதன் போக்கிலேயே சென்றுகொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நிம்மதியும் மகிழ்ச்சியும் இந்த தனிமை வாழ்க்கையில்தான் கிடைத்துள்ளது. அதற்கே நான் பழகிவிட்டேன். அப்படியே செல்வதுதான் நல்லது," என்று தெரிவித்துள்ளார்.

வைரலாகும் கருத்து

சல்மான் கானின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரது மனநிலையை புரிந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருவதுடன், வாழ்க்கையைப் பற்றிய அவரது முதிர்ச்சியான பார்வை ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. அவரது இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com