ஜான்வி கபூர் பிறந்த நாளில் “பெத்தி” படக்குழு வெளியிட்ட வீடியோ

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’ படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகிறது.
ஜான்வி கபூர் பிறந்த நாளில் “பெத்தி” படக்குழு வெளியிட்ட வீடியோ
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீதேவி - போனி கபூருக்கு மகளாகப் பிறந்த ஜான்வி கபூர் 2018ல் தடாக் எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கும் இவர் கடைசியாக 2025ல் இரண்டு பாலிவுட் படங்களில் நடித்திருந்தார். தற்போது, தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, சிக்கிரி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பெத்தி’ படம், வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஜான்வி பிறந்த நாளில் ஆச்சியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பெத்தி’ பட படப்பிடிப்பு வீடியோவை இயக்குநர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com