தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவு கிடையாது- தங்கர் பச்சான்

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது என்று ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது என்றும் இயக்குனர் தங்கர் பச்சான் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவு கிடையாது- தங்கர் பச்சான்
Published on

நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க வேட்பாளராக கடலூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அவர் வெற்றி பெறுவாரா என்பது ஜூன் 4-ம் தேதி தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும் என்றும் இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது என்றும் அவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஊருக்கும் சாராய தொழிற்சாலை அமைக்கிறார்கள், ஆனால் முந்திரி பழத்தை ஜூஸாக மாற்றும் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும் என்றும் இது குறித்து யாரும் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் ஆவது கடலூர் மாவட்டத்தில்தான் என்றும் ஆனால் இந்தியாவிலேயே அதிகமாக குடிசை பகுதி உள்ள பகுதியாக கடலூர் மாவட்டம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தங்கர்பச்சானின் இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com